டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

நிதர்சனமாகா ஆசைகள்

புவியைத் தாண்டி புலம்பெயர்ந்து புதுயுகம் படைக்க ஆசை

புவியிடைக் கோட்டில் நின்று பூரிப்பாய் பூ பந்தாட ஆசை

கைரேகையை வைத்து ஆயுளைக் கணக்கிடும் கணியனைப்போல்

புவிரேகையை வைத்து ஆயுளைக் கணக்கிடும் கணியனைக் காண ஆசை

என்னைப்போல் உருகொண்ட ஒருவனை என்னருகில் நின்று ஏறிட்டு கண்டுணர ஆசை

மேகத்தை உடையாக்கி மின்னலினை அணிகலனாக்கி மேனியின் மேல் மேவிவிட ஆசை

ஊழலற்ற ஊழியனுக்கு உயர் விருது கிடைக்க ஆசை

நாடாளும் நரன்களில் நல்லாட்சி புரிய இன்னொரு கர்மவீரரை காண ஆசை

அரசியல் தொடர்பிலா அரசியலமைப்பின் முதல் குடிமகன் அக்னிச்சிரகின் நாயகனின் முகம் காண ஆசை

சிரம் வீழும் காலம் வரை கரம் பிடித்து உரம் சேர்க்கும் உறவோடு உறவாட ஆசை

இமைமூடும் நிலைவரினும் எவருக்கும் சுமையாக இல்லாமல் சுகமான நிலையுறக்கம் நீக்கமற ஏற்க ஆசை

உதரம் நீங்கிய மெய் உள் செல்லலாகாது

உயிர் நீங்கிய மெய் வெளி செல்லலாகாது

இவைபோலத்தான் இந்த நிதர்சனமில்லா ஆசையும்

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353