அது மகப்பேறு மருத்துவமனை
இளம் பிள்ளைகளிடம்
அத்தனை பயம்
கரம் முழுவதும்
மருத்துவ அட்டைகள்…
என் பழைய
நினைவுகளை
அகத்துக்குள் தூண்டி
கருச்சுமக்கும்
தாயாய் மாறிய அந்தநொடி …
இன்று
இனிமையைக் கூட்டித் தந்தாலும்…
அன்று இவர்களை
போல் நானும்
பயத்தில் இருந்த
தருணம்..
நினைவுக் குடைக்குள்
ஈரம் நனைத்து செல்கிறது
செ.புனிதஜோதி
சென்னை