நீங்களுமே தேடுங்க … – இராசபாளையம் முருகேசன்

மழை பொழிஞ்சு ஓய்ந்த பின்னே

தவளை நாங்க பாடுவதை

குழந்தைகளும் கேட்டு மகிழ்ந்த

காலம் எங்கே?

தேடுங்க …

சேறும் சகதியுமா நிறைந்திருந்த கண்மாயின்

கரை சுருங்கி போனதெங்கே?

தேடுங்க …

ஊர்கழிவு நீரால இறந்து போன ஏரிகளை

ஊரோரம் காணவில்லை!

ஓடி வந்து தேடுங்க …

நீர்பிடிப்பு பகுதிகளில் நெடுந்தூரம் தொலைஞ்சுருச்சு

நீர் வரும் கால்வாயும் ஓடையாகி சுருங்கிருச்சு!

நீங்களுமே தேடுங்க …

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.