இது உன் காடு
எந்த மரக்கிளையில் வேண்டுமானாலும்
கூடு அமைக்கலாம் நீ …
எல்லா திசைகளுமே
உன் றெக்கையை நேசிக்கின்றன…
எந்த ஒரு பூவும் நீ
குடிக்கும் தேனுக்குத்
தடை போடுவதாக இல்லை …
ஓடும் நதியாவிலும்
தாகம் தீர்த்துக் கொள்ளும்
உரிமை இருக்கிறது உனக்கு…
மனிதக் காற்றை
சுவாசிக்காத வரையில்
உனதானது உனதாகவே இருக்கும்
நீ நீயாகவே இருப்பாய் ..!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!