நாம் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலியவை அவசியம் தேவை.
அதற்கு நாம் அவரவற்கு விருப்பமான வேலைகள் செய்து ஒழுக்கத்துடனும் நேர்வழியிலும் பணம் சம்பாதித்து வாழ வேண்டுமென நமது முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள்.
அதற்காக ‘பணம், பணம்’ என்று பேராசைப்பட்டு, நேர்வழியில் சென்று பணம் சம்பாதிக்காமல் குறுக்கு வழியில் பணம் சேர்த்தால், கொஞ்ச நாட்கள் தான் பணம் நம்மிடம் இருக்கும்.
அதிக நாட்கள் தங்காமல் எப்படி வந்ததோ, அதே மாதிரி போய்விடும் என்பது உறுதி. அதனால் தான் ‘முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்’ என்று பழமொழி சொல்லியிருக்கிறார்கள்.
நல்ல காரியங்கள் செய்தால், நமக்கு எப்படியும் கடைசி காலத்திற்குள் யார் மூலமாவது நன்மை கிடைக்குமாறு ஆண்டவன் செய்வார் என்பது உறுதி.
நன்மை செய்து வந்தால் நன்மையும், தப்பான வழிகளில் சென்றால் அதற்கு உண்டான தண்டனையும் ஆண்டவன் கொடுப்பார் என்பதை நம் முன்னோர்கள் ‘அரசன் அன்றே கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்‘ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆண்டவனை யாரும் ஏமாற்ற முடியாது. ஏமாற்றியவரும் இதுவரையில் உலகில் யாரும் கிடையாது.
ஆகையால் நாம் நம்மால் முடிந்த உதவியை இல்லாதவர்களுக்கு செய்துவிட்டுச் செல்வோம்.