பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
வளர்ரோமுன்னு நெனச்சு செஞ்ச
தொழில்களால மோசமாச்சு
நல்லதுன்னு சொல்லிச் சொல்லி
காடு மலை நாசமாச்சு
பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
வேனுமுண்ணு தோண்டித் தோண்டி
நிலமெல்லாம் ஓட்டையாச்சு
இமயமலையே வேர்த்துக் கொட்டி
தண்ணி யெல்லாம் ஆவியாச்சு
பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
போன தண்ணி திரும்ப வரல
வந்த மழை விளைச்சல் தரல
குட்ட குளம் நிரம்ப இல்ல
கடலு மட்டும் ஒசந்து போச்சு
பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
ஆடு மாடு நாய்க கூட
அறிவோட திரியிறப்போ
ஆறறிவுண்ணு சொல்லிக்கிட்டே
புத்திகெட்டு திரியுறமே
பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
பூமிப்பந்து எரியுதுன்னு
கூவிக் கூவி பாடினாலும்
சனங்க இத பாத்துப் போட்டு
வேலை என்னன்னு ஓடுறோமே
காசு மட்டும் போதுமுன்னு
பேரனுக்கு சேத்து வைக்க
பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
தப்புக் கணக்கு போட்டுப்புட்டு
உசுருக்கு உல வெக்கிறோமே
கைநழுவி போச்சு இப்போ
நின்னு பாக்கும் நேரம் எப்போ?
நின்னு பாக்கும் நேரம் எப்போ?
எம். சுரேஷ்குமார்
திருப்பூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!