பன்னீரின் பயன்பாடுகள்

ரோஜாப்பூ!

மிக அழகான பெயரைக் கொண்ட இம்மலரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் பன்னீர்! பன்னீரைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு உலகளவில் இருந்து வருகிறது.

மனதிற்கினிய ரோஜா நறுமணத்துடன் கூடிய பன்னீர் முதன் முதலாகத் தோன்றிய இடம் பெர்சியா.

இதமான, சுகந்த வாசனையுடன் கூடிய ரோஜா மலரின் இதழ்களை அப்படியே வாயில் போட்டு மெல்லலாம்! ரோஜா மலரிலிருக்கும் மருத்துவ குணங்கள் மகத்தானது.

நரம்புத் தளர்ச்சிக்கும் இதய நோய்களுக்கும் வீக்கத்திற்கும், ரோஜா மலரும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீரும் கை கண்ட மருந்து.

கோடையில் சருமத்தில் தோன்றும் கொப்புளங்கள், கட்டிகள் மற்றும் அதிக வியர்வை ஆகியவைகளை பன்னீரும் ரோஜா மலரும் விரட்டியடிக்கும்.

முகப்பவுடர், கிரீம் போன்ற அழகு சாதனங்களிலும் ரோஜா மலரின் எசென்ஸ் பயன்படுத்தும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

மனத்திற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படவே திருமணம் மற்றும் இதர வைபவங்களின் போது பன்னீர் தெளிக்கிறார்கள்.

சருமத்தில் ஏற்படும் தேமல், வடு மற்றும் எண்ணெயுடன் கூடிய சருமம் போன்றவைகளுக்கும் பன்னீர் மிகச்சிறந்த நிவாரணி.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.