வெகு நுட்பமாகவே
நடக்க முடிகிறது
வாழ்க்கைக் கம்பி மேல்!
சொந்த பந்தம்
வீடு வாசல்
சமநிலைப்படுத்தும்
கலை கேட்கிறது!
வெயில் பனி
மழை புயல்
என இயற்கையோடு
இழைதலும்!
வாகன நெரிசல்
புகை தூசென
பறக்கிறது பயணம்!
கடமை
காத்திருப்பென நழுவுகிறது
கைபேசிக்காலம்
சடுதியில்!
சுயநலமெனில்
அழிப்பதற்கேதும்
தயக்கமில்லையென
தரவுகள்!
ஆகப்பெருவெளியில்
எனக்கேயென
விரிகின்றன சிறகுகள்!
பெரும் ஈட்டுதலும்
நுகர்தலுமே
பிரதானமென
ஆர்ப்பரித்து அலைபாய்கிறது
பேராசை!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com