பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்
பாவி உன்ன காணாம தானாப் பேசுறேன்
சிட்டொன்று தாவிச் செல்ல காணும் போதிலே
செந்தேனே உன் கண்ண போல எண்ணத் தோணுதே
பட்டு நிலா வானத்தில் பையப் பைய போகும்போது
பைங்கிளியே உன் முகம் போல் என் மனதில் தோணுது
கொட்டி வச்ச நட்சத்திரக் கூட்டத்தையே பார்க்கையில
செல்லமாக நீ பேசி சிரிப்பது போல் தோணுதே
வெள்ளரிக்கா பிஞ்செல்லாம் உன் விரல் போல் இருக்குதே
வெட்டருவா நுனி கூட உன் மூக்கைப் போல தோணுதே
முட்செடியில் ரோசாப்பூ பூத்திருக்க பார்க்கையில
முள்ளெல்லாம் உன் குடும்பம் ஒத்த ரோசா நீதானடி
திட்டிடத்தான் செய்தாலும் உன் வார்த்தை பாட்டாகும்
தேள்போல கொட்டினாலும் என் பாட்டின் இசையாகும்
வெட்டி நீ முகம் சொடுக்க எனக்கதுவே இயைபாகும்
வேல் விழியால் தாக்கினாலும் எதுகை மோனை என்றாகும்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!