பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!
மெதுவாய் நகர்ந்து
வேகம் பிடித்து வந்த
நாகரிகத் தணல்களில்
எதுவெல்லாமோ எரிந்து சாம்பலாகி
ஏதேதோ முளைத்தாகி விட்டது!
சூனியமான சுதந்திரத்தால்
எங்கெல்லாமோ போர்க் கொடிகள்!
காடு விட்டு நாடு வந்ததாய்
விரட்டியடிப்பு! விசாரணை இன்றிக் கைது!
கவளத்தை வாங்கி கவலையோடு
தின்றுவிட்டு அங்குசக் கட்டுப்பாட்டில்
அமைதியாய் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது
அந்தக் கோவில் யானை!
என்றேனும்
காடு கொள்ளக் காத்திருக்கலாம்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
மறுமொழி இடவும்