விசாரித்து விரிந்து
விருப்பத்தைச் சமைத்து
அகம் மகிழ்ந்து
தன்னை ஆட்படுத்தி
அரங்கேறும்
அப்போதெல்லாம் விருந்தோம்பல்
இப்போதெல்லாம்
சுருங்கிய மனம் போல்
குவளைத் தேநீரோடு
குசலம் நிறைவு பெறுகிறது
வழிப்போக்கர் இளைப்பாறும்
திண்ணைகள்
வரைபடத்திலும்
நீக்கம் பெற்ற போக்கானது
மதில்கள் மறைத்துக் கொண்ட
மனங்களில்
விரட்டி அடிக்கப்பட்ட
விசாரிப்புகளையும்
விருந்தோம்பல்களையும்
யாரோ
கக்கத்தில் வைத்து
புகுந்திருக்கக் கூடும்
ககனத்தில்!
(ககனம் என்றால் வானம் என்று பொருள்)
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
9894918250
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!