அன்பிற்கு அடிபணி
ஆணவம் கொண்டார் ஆழ மிதிபடுவார்
இல்லாமை என்பதே இயலாமை கண்ணே
ஈத்துவக்கும் இன்பம் ஈன்றோர்க்கு இனிமை
உவகையிலும் உறவோடு நில்
ஊன் வருந்த உழைத்தால் உயர்வு நிச்சயம்
என்பும் உருகும்படி பேசுவார் எள்ளளவும் பயனிலார்
ஏற்றம் கண்டு கூடுவார் ஏளனம் செய்ய காத்திருப்பார்
ஐயம் இன்றி வாழ்ந்திடலாம் உண்மை மட்டுமே துணை கொண்டால்
ஒற்றுமை என்றும் நலம் தரும்தான் ஒளிவு மறைவுகளைப் புரிந்து கொண்டால்
ஓடம் போலும் மானிடர் வாழ்வு; ஓதுதல் ஒன்றே கரை சேர்க்கும்
ஔவியம் கலவாத வாழ்வில் ஔடதத்திற்கு இடமில்லை
எஃகு போல் உளம் படைப்பீர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!