எண்ணங்களை உயர்வாக வை
எல்லையில்லா சிந்தனை செய்!
இதெல்லாம் நடக்குமாயென நினைக்காதே!
வானில் பறக்க நினைத்ததால் தான்
வானூர்தி கண்டுபிடிப்பு உருவானது
தொலைவில் நடப்பதை காண நினைத்ததால்
தொலைக்காட்சி கண்டுபிடிப்பு உருவானது
தந்தி அனுப்பிய காலம்போய் – ஒருநொடியில்
தகவல் பரிமாற்றம் செல்போனில்!
இன்றைய நிலையிலேயே நின்றுவிடாதே!
இனியொரு புதுவிதி செய்
உன் சிந்தனைகளால்
மலரட்டும் புதுபுது கண்டுபிடிப்புகள்!
தந்தியிலேயே உலகம் நின்றுவிடவில்லை
அதை தாண்டிய சிந்தனைகளின் பயணம்
அகில உலகிலும் தொடர்ந்தது!
யாரும் எண்ணாததை எண்ணினார்கள்
எண்ணற்ற கண்டுபிடிப்பாளர்கள்!
ஏற்றமிகு எண்ணங்களை விதை – மரமாய்
முளைக்கட்டும் புதுப்புது சிந்தனைகள்!
சிந்தித்துக்கொண்டேயிரு – உன் நினைப்பில்
உதிக்கட்டும் பல புதுப்புது சிந்தனைகள்!
இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!