இறைவனை துதி
விலகிடும் சதி
கனவு காணுங்கள்
நனவாக்க மட்டும்
உதவி வாழ்
உதவிக்காக வாழாதே
எளிமையாய் வாழ்
அடிமையாய் வாழாதே
நன்றியை மறக்காதே
நன்மை செய்வதை விலக்காதே
எந்த நிலையிலும் பொறுமையாய் இரு
நன்மை கூடி வரும் உன்னைத் தேடி வரும்.
பகலில் துஞ்சாதே
பகைக்கு அஞ்சாதே
மூத்தோர் சொல் தட்டாதே
முயற்சி இன்றி எதுவும் கிட்டாதே
பொய் கூறி வாழாதே
உண்மை என்றும் வீழாதே
போதையை தொடாதே
பாதையை விடாதே
மறுமொழி இடவும்