2020 எனும் கொடிய
ஆண்டை அழித்து
இன்பத்தை அளிக்க
வருகை தரும்
2021 எனும் புதிய
புத்தாண்டே வருக!
ஆறுதல் தருக!
ஆனந்தம் தருக!
இழந்தவை மீட்க
இன்முகத்தோடு வருக!
ஆரவாரமான ஆனந்தமே
ஆங்கிலப் புத்தாண்டே
வருக! வருக!
மக்கள் நோயின்றி
மகிழ்ந்திட புத்தாண்டே
வருக! வருக!
மாணவர்களின் மகத்தான
கல்வியை மீட்டெடுக்க
மாபெரும் புத்தாண்டே
வருக! வருக!
முகக் கவசத்தை அழிக்கும்
உயிர் கவசமாய்ப் புத்தாண்டே
வருக! வருக!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!