போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!
நாடாளும் மன்னவனும்
போராடி ஜெயித்திடனும்!
நாள்தோறும் குடிமகனும்
உழைத்தே தான் வாழ்ந்திடனும்!
தீராத ஆர்வம் கொண்டால்
விண் நிலவும் கை அருகே!
சோராமல் உழைப்பதனால்
வெற்றித் திருமகளும் உன் அருகே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!