மலையின் மேலே
மலைபோன்ற மேகம் ஆனால்
நிலையில்லை
மனதின் மீதே
மலைபோன்ற சோகம் ஆனால்
நிலையில்லை
அதனால் கவலையில்லை
எல்லா மேகங்களும் பொழிவதில்லை
எல்லா சோகங்களும் மனிதனை அடைவதில்லை
உலகத்தின் மிகப்பெரிய மலை
நீ முதலில் பார்த்த மலை அதன்பிறகு
பார்க்கும் மலையெல்லாம் சிறுமலைதான்
உனக்கு மிகப்பெரிய சோகம்
நீ முதலில் அனுபவித்த சோகம்
அதன்பிறகு அனுபவிக்கும் சோகமெல்லாம்
சின்னஞ்சிறு தூசிதான்
நீ மேற்கொள்ளும் எந்தஒரு
சிறு முயற்சியிலும் மனநிறைவைக் கண்டால்
நீயே உயர்ந்தவன்
நீயே உயர்ந்தவன்
அது வெற்றியானாலும் தோல்வியானாலும்
நீயே உயர்ந்தவன்
எதிலும் மனநிறைவைக்காணும் நீ
மானிடர் வாழ்க்கையின் இலக்கணம்
மானிடர் வாழ்க்கையின் இலக்கியம்
மானிடர் வாழ்க்கையின் இதயம்
ஒவ்வொரு மனிதரின் இதயத்தை துடிக்க வைக்கும்
காற்றே நீ தான்
காதலும் நீ தான்
கவிஞனும் நீ தான்

ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371
மின்னஞ்சல் : kannankalaiaselvan2001@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!