வெகு நாட்களாக
எண்ணமற்று திரிந்து கொண்டிருந்த
அந்த ஆற்றில்
ஓடிக் கொண்டிருக்கும் நீரை
தடுக்க மீடியாமல்
இரு கைகளால் அள்ளியெடுத்த
நீர்
அகப்பட்டுக் கொண்ட வானத்தோடு
காட்டியது என்னையும்…
கெண்டைகள் துள்ளிய
கை நீரில்
இப்போது எட்டிப் பார்த்தது சூரியனும்
விரல் வழியே
நழுவி வழிந்த தண்மை
தழுவிய நெஞ்சம் சிலிர்த்தது
அவள் போலவே
எனக்கும் ஆகிப் போனதில்
என் கைகளில்
குழைந்து நெளிந்து நெகிழ்ந்து
போனது
சந்தர்ப்பத்தை நழுவவிடாத
என் ஆசையில்
மாலை புலர்ந்து
மலர்ந்து கொண்டது
எம்மைப் போல்
அல்லியும் சந்திரனும்;
மனவலையில் சிக்கிய மீனாக…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432