இன்பம் என நீ மகிழ்வதும் இன்பமல்லவே…
துன்பம் என நீ துவள்வதும் துன்பமல்லவே…
மாறும் மனதில் துவள்தல்
மாற்றம் நிகழும்
மயங்காதே
நண்பா!
தேறும் உன்னிலை
தெளிவான வான்போல்
கலங்காதே நண்பா!
வண்ண நிலவும்
வானில் ஊர்வலம்
வருகின்ற அழகை
நீயும் கொஞ்சம் பாரு!
வளர்பிறை நிலவும்
தேய்ந்து மீண்டும்
வளர்கின்ற அதிசயம்
நீயும் கொஞ்சம் பாரு!
தழுவும் தென்றலும்
தன்னிலை மாறும்…
தகித்து மீண்டும்
குளிரும் பாரு…
இரும்பு மனதுள்
அரும்பும் உண்டு
அறிந்திட சுகம் கோடி…
கரும்பாய்ப் பேசி
கடந்திடும் போக்கில்
அன்பது வரும் நாடி…
க.கல்பனாதேவி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!