தமிழக முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்!
திக்கற்று நிற்கும் ஆசிரியர்களைக் காப்பாற்றுங்கள்!
பரிதவிப்பில் இருக்கிறார்கள்
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி
இறந்து போனவர்கள் பலர்
இருந்தும் தினந்தினம்
இறந்து போகிறோம் நாங்கள்
ஓராண்டு காலமாக ஊதியமின்றி
உண்ண வழியில்லாமல் உறங்க முடியாமல்
கடன் வாங்கி வாங்கிக் கட்ட முடியாமல்
அவமானப்பட்டுக் கிடக்கிறோம்
அறப்பணி செய்த நாங்கள்
அல்லல்பட்டு முடங்கி மூலையில் கிடக்கின்றோம்
தங்கள் கைகளில் இருக்கிறது
தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வு
கொரோனா நிவாரண உதவியாக
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்
கருணையோடு சிறு தொகை வழங்குங்கள்
கண்ணீரைத் துடைத்திடுங்கள்
தமிழக முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்!
திக்கற்று நிற்கும் ஆசிரியர்களைக் காப்பாற்றுங்கள்!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்