உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும்.
மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும்.
‘மூங்கில் பூ’ காண்பதற்கு ரொம்பவும் அபூர்வமான ஒன்று. பாம்புஸா அருண்டாநாசியா (Bambusa Arundanacca) என்றொரு முட்களுடன் கூடிய மூங்கில் 50-லிருந்து 60 வருடங்கள் இடைவெளியுடன் மிக அபூர்வமாக பூக்கும்.
தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்திலுள்ள நல்லமலைக் காடுகளில் மூங்கில் அதிகம் வளர்கிறது. இக்காட்டில் மூங்கிலானது 1935-லிருந்து 1938 வரை பூத்திருக்கிறது. பிறகு 50 வருடங்களுக்குப் பின் 1985-ல் தான் பூத்ததாம்!
நல்ல மலைக்காட்டுவாசிகளால் தயாரிக்கப்படும் ஒரு மருந்தில் மூங்கில் விதை(கள்) முக்கிய கலவைப் பொருளாக இடம் பெறுகிறது.
மூங்கில் விதை கோதுமை வடிவத்தில் பார்ப்பதற்கு கோதுமை போன்றே இருக்கும். ஆனால் கோதுமையின் நிறம் இருக்காது.
மூங்கில் மரத்தைக் கொண்டு இன்று எண்ணற்ற பொருட்கள் செய்யப்படுகின்றன. முக்கியமாக நாற்காலிகள், கூடைகள், ஊஞ்சல்கள், கட்டில்கள், புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!