பார்த்தனுக்கு சாரதி
வேதத்துக்கு நாயகன்
ஆர்வமுடன் திருவல்லிக் கேணியிலே
சொந்தமுடன் நின்றவன்…
வார்த்தெடுத்த ரூபனவன்
மீசை கொண்ட வேங்கடவன்
வாரித் தரும் வள்ளலவன்
வார்த்தை இல்லை போற்றுதற்கு…
கார்மேக வண்ணனவன்
துழாயலங்கல் மேனியினன்
ஆர்த்தி கொண்ட பக்தருக்கு
மேலான தெய்வனவன்…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com