வந்தாளே! வந்தாளே! வந்தாளே!
வந்தாளே! என்னவளே வந்தாளே!
தேவதை போல் அல்ல
தேவதையே வந்தாளே!
தேன்கூட்டைப் போல் அல்ல
தேன்கூடே வந்தாளே!
மலர் போல் அல்ல
மலரே எதிரில் வந்தாளே!
மான் போல் அல்ல
மானே துள்ளி வந்தாளே!
நிலவு போல் அல்ல
நிலவே குளிர் தந்தாளே!
நிமிடங்கள் செல்லாமல்
நிற்க என்னுள் வந்தாளே!
தமிழின் உவம உருபுகளை எல்லாம்
உடைத்து உருவம் கொண்டு வந்தாளே!!!

நல்லாசிரியர் கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர், தமிழ்த்துறைத் தலைவர்
மாவட்டத் துணைச் செயலாளர் (உலக திருவள்ளுவர் திருப்பணிக் கழகம்)
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்