காலாற நடந்து கழனி காடு தேடி
காலைக்கடன் முடித்தது முடிந்து
படுக்கை அறைக்கு பக்கத்திலேயே
நெருங்கி வந்து நெளிகிறது வளர்ச்சி…
தோப்புத் துறவெல்லாம் தூக்கி சாப்பிட்டு
ஏப்பம் விட்ட பிறகே ஆப்பசைத்து
மாட்டிக்கிட்ட அவஸ்தையாய் தொட்டி செடி வைத்து
வெட்டி வேளாண்மையில் முகங்கள்…
வழுவழுப்பாய் கல் பதித்த வரவேற்பறை
வக்கணையாய் பொங்கி திங்க சமையலறை
குளிர் ஊட்டிய படுக்கையறை
குல சாமிக்கும் ஓர் அறை
வாஸ்த்துக்குக் குறையில்லாமல்
வாய்ச்சிருக்கும் நல்ல இல்லம்
கெழடுக ரெண்டுக்கும் கேட்டு இருக்காங்க
முதியோர் இல்லம்…
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250