வளர்ந்த கீரை வாடும் முன்னே
வட்டிலிலே விழ வச்ச எங்க மண்ணு…
வளர்க்க படாத நாய்கள் கூட்டம் வாலை
ஆட்டித் தெருவைக் காக்கும் எங்க மண்ணு…
மலர்ந்த தாமரையாய் மஞ்சள் நிலா
தவழ்ந்து வர
தரையில உருண்டபடி
இரவெல்லாம் ரசிக்க வச்ச எங்க மண்ணு…
வளர்த்த பசும் பாலெல்லாம்
கன்னுக்கும் சின்ன பிள்ளைக்கும் என
பகிர்ந்தளித்த எங்க மண்ணு…
உயிர்ப்புடன் இருந்த மண்ணு
உயிரற்றுப் போயிடுச்சே…
பயமின்றி இருந்த வாழ்க்கை
பறிபோன நிலையும் ஆச்சே…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்