ஓட்டு போட மக்களுக்கு
நோட்டு கொடுக்கும் மனிதா!
கை நீட்டி வாங்கும் காசுக்கு
காலமெல்லாம் அடிமை என்ற நினைவா?
ஆட்சி பிடிக்க சலுகைகளை
அள்ளித் தரும் மனிதா!
மனசாட்சி இன்றி வாக்களிக்க மாட்டோம்
புரிந்துகொள்வாயா தெளிவா?
வாக்களிக்கும் முன் எங்களை
தெய்வமாய் சுற்றும் மனிதா!
வாக்களித்த பின் எங்களைக்
குப்பையில் வீசுவது முறையா?
திவ்ய பாரதி
மறுமொழி இடவும்