வாழிய பாரதம்! வாழிய பாரதம்!

இந்தியா

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!

பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு

மதங்கள் மறந்தோம்…
மொழிகள் கடந்தோம்…
மதங்கள் மறந்தோம் மொழிகள் கடந்தோம்
இதயங்கள் மலர்ந்திட ஒன்றிணைந்தோம்!
இன்று யாவரும் ஒன்றிணைந்தோம்!

பெற்ற சுதந்திரம் பேணிடவே
ஏற்றிய கொடியும் பறந்திடவே
எங்கும் நம்புகழ் ஓங்கிடவே
வாழிய பாரதம் வாழியவே!

மன்னராட்சி மறைந்த தினம்
மக்களாட்சி மலர்ந்த தினம்
என்றே யாவரும் பாடிடுவோம்

ஆடிடுவோம்…
பள்ளு பாடிடுவோம்…
ஆடிடுவோம் பள்ளு பாடிடுவோம்
பாரதி கனவை நிறைவேற்றிடுவோம்
பாரதி கனவை நிறைவேற்றிடுவோம்

ஒன்று கலந்து வென்று எழுவோம்
இன்னுயிர் ஈந்து மண்ணுயிர் காத்த
தலைவர்கள் (மாந்தர்கள்) தம்மை போற்றிடுவோம்

தாய்மண்ணை நாமும் வணங்கிடுவோம்!
தாய்மண்னை நாமும் வணங்கிடுவோம்!
தாய்மண்ணை நாமும் வணங்கிடுவோம்!

வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே
எங்கள் பாரதம் வாழிய வாழியவே
வாழிய வாழியவே!
வாழிய வாழியவே!

க.கல்பனாதேவி
சென்னை