ஓடிக் கொண்டே இருக்கும் வரை
நதி தன் பெருமையை இழப்பதில்லை
பாடிக் கொண்டு இருக்கும் வரை
புல்லாங்குழல் தன் புகழை இழப்பதில்லை
தேடிக் கொண்டு இருக்கும் வரை
மனிதன் தன் உயிரை இழப்பதில்லை
தேடுதலற்ற மனிதர்களின்
தேவையென்ன பூமியிலே?
உயிர் வாழ்வதல்ல வாழ்க்கை
உயிர்ப்புடன் வாழ்வதே வாழ்க்கை!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!