புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
என்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள்.
அதன் பொருள் என்ன?
புத்தம் சரணம் கச்சாமி
என்னை புத்தரிடத்தில் ஒப்படைத்துக் கொள்கிறேன்; அதாவது பகுத்தறிவு சிந்தனைக்கு ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்.
தம்மம் சரணம் கச்சாமி
பகுத்தறிவுக் கொள்கையில் என்றும் மாறாமல் இருப்பேன் என்று பொருள்.
சங்கம் சரணம் கச்சாமி
அமைப்பு மூலம் பகுத்தறிவு கொள்கையை மக்களிடம் எடுத்துச் செல்வேன் என்று பொருள்.
வாழ்கையில் பல்வேறு நிலைப்பாடுகளுக்கும் இது பொருந்தும்.
ஆம். நட்பு, பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் என எல்லா நிலைகளிலும் சிறந்த முடிவு எடுக்க இதைப் பின்பற்ற நம் வாழ்வு சிறக்கும்.
கைபேசி: 9865802942