உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி
பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி
எதை செய்தாலும் திருந்த செய்யணும் வகுத்தபடி
அதை திருப்பிப் பார்த்து செயல்படுத்தணும் திட்டப்படி
தீர்க்க நோக்கம் திறமை தானே வளர்த்துக்கணும்
திறன் வளர்த்து இத்தரணி பல உயர்த்திடணும்
வெற்றி பாதை நடைபோடு உழைப்பாலே
உன் திறமைதனை வெளிப்படுத்த தயங்காதே
விருப்பத்தோடு உழைத்து பாரு விடை கிடைக்கும்
வீதிதோறும் வாழ்த்தி உனக்கு விழா எடுக்கும்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!