போட்டி போடு போட்டி போடு
இணையானவரிடம் போட்டி போடு
காட்டி விடு காட்டி விடு
நீ யாரென்று காட்டி விடு
தீட்டி விடு தீட்டி விடு
உன் புத்தியை தீட்டிவிடு
கூட்டி விடு கூட்டி விடு
பொது அறிவைக் கூட்டி விடு
மூட்டி விடு மூட்டி விடு
அறிவுத் தீயை மூட்டி விடு
வெட்டி விடு வெட்டி விடு
வெறுப்புகளை வெட்டி விடு
தட்டி விடு தட்டி விடு
துயரங்களை தட்டி விடு
கொட்டி விடு கொட்டி விடு
திறமைகளை கொட்டி விடு
கட்டி விடு கட்டி விடு
கோபங்களை கட்டி விடு
வெற்றி பெறு வெற்றி பெறு
தினந்தோறும் வெற்றி பெறு
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!