சாப்பிடப் போறீங்களா?

சாப்பிடப் போறீங்களா?

எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து சாப்பிடுங்கள்!

பசிக்கும் போது மட்டுமே சாப்பிடவும். அது அளவாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும்.

வயிறு புடைக்கவும், மூச்சு முட்டவும் சாப்பிடாதீர்.

சாப்பிடும் முன் கை மற்றும் வாயை நன்றாக கழுவுவது அவசியம்.

கையில் ஈரம் உலரும் முன் சாப்பிடத் தொடங்க வேண்டும்.

சாப்பிடும்போது பாதியில் எழுவதோ, நின்று கொண்டோ சாப்பிடக் கூடாது.

தட்டைக் கையில் ஏந்திக் கொண்டோ, மடியில் வைத்தபடியோ படுத்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.

நிலவின் ஒளியில் பவுர்ணமி தவிர மற்ற நாளில் சாப்பிடக்கூடாது.

சாப்பாட்டையோ, மற்ற உணவுகளையோ சாப்பிடும் தட்டால் மூடி வைக்கக் கூடாது.

இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர் மற்றும் நெல்லிக்காய் சேர்க்கக்கூடாது.

முதலில் காய்கறிகள், அப்பளம் பரிமாறிய பின்பே சோறு வைக்க வேண்டும்.

துக்க நிகழ்ச்சி தவிர மற்ற நிகழ்வுகளில் கீரை, வத்தல் அல்லது பாகற்காய் முதலில் பரிமாறக் கூடாது.

முன்னோர்களின் நினைவு நாளில் வீட்டில் அன்னதானம் செய்யுங்கள்.

கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுளும், தெற்கு நோக்கிச் சாப்பிட புகழும், மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வமும் வளரும்.

வெண்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமைக்கக் கூடாது.

வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு மற்றும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

உணவில் மிளகு சேர்த்தால் உடலில் உள்ள விஷத்தன்மை நீங்கும்.

சீரகம் சேர்த்தால் உடம்பு சீராகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை பல்தேய்த்த பின் தண்ணீருடன் பருகவும். அதனால் உடம்பில் சூடு குறையும்.

கடுகு உடல் சூட்டை சமமாக வைத்திருக்கும்.

இஞ்சி சேர்த்தால் பித்தம், தலை சுற்றல் மற்றும் வாந்தி வராது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.