தள்ளிப் போடாதே!

எதை செய்வதென்று குழம்பாதே! – அதுதான்

தள்ளிப் போடும் பழக்கத்தின் ஆரம்பப் புள்ளி

சரியான முடிவெடு – அதற்காக

சிறப்பான திட்டமிடு

தினம்தினம் உன்னை சுறுசுறுப்பாக்கு

திட்டமிட்ட செயல்களை முடித்துவிடு – அது

உனது தன்னம்பிக்கையைக் கூட்டும்!

திட்டமிட்டபடி முடியவில்லையா? தளராதே!

தினமொரு கால அட்டவணையை உருவாக்கு

அன்றைய செயல்களை நிறைவாக்கு

திட்டமிட்டபடி நடந்ததைப் போல

கற்பனையில் காட்சிகளை ஓடவிடு

உனக்குள் பிறக்கும் புதுசக்தி – அது

உன்னை செயல்பட வைக்கும்!

திட்டமிட்ட பாதையிலே பயணி-அதற்கு

உன் மனதை பழக்கப்படுத்து

பழக்கமே வழக்கமாகி விட்டால் வேலையில்

இருக்காது சுணக்கம் – நாளும்

தள்ளிப்போடும் பழக்கத்தை விட்டு விடு

தினமும் சுறுசுறுப்பாய் இருந்துவிடு!

இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்

One Reply to “தள்ளிப் போடாதே!”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.