விழிப்புணர்வு!

டெங்கு காய்ச்சல் வந்து, ஒரு மாத ஓய்வுக்குப் பின் நடமாடத் துவங்கினாள் திவ்யா.

மாநகராட்சியிலிருந்து வீடுகளை ஆய்வு செய்ய, வாரம் ஒருமுறை மூன்று பெண்கள் வந்தார்கள்.

அவர்களோடு சேர்ந்து, பத்து வீடு தள்ளி இருந்த ஒரு வயதான மூதாட்டியின் வீட்டிற்கு வந்தாள் திவ்யா.

“பாட்டி, இந்த வயசுலகூட தெம்பா, சுறுசுறுப்பா இருக்கீங்க! வீட்டை சுத்தமா வெச்சிருக்கீங்க. நாங்க எவ்வளவு சொல்லியும், இந்த திவ்யா கேட்காம தண்ணீரை தேங்க வெச்சி, சுத்தம் செய்யாம இருந்தா, அதனால டெங்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருந்தா.

ஒரு மாச ஓய்வுக்கு அப்புறம், இப்பத்தான் தேறி இருக்கா. நீங்க வீட்டோட சுற்றுப்புற பகுதிகளை எப்படி வச்சிருக்கீங்கன்னு காட்டுறதுக்கு தான் கூட்டிகிட்டு வந்தோம்” ஊழியர்கள் சொல்ல, திவ்யா எல்லா இடங்களையும் பார்வையிட்டாள்.

“எனக்கு வயசு 70. சுத்தம் தான் நோயை தடுக்கும்னு உணர்ந்து, வீட்டை சுத்தமா வெச்சிருக்கேன். வீணா கிடக்கிற பொருட்களை அப்புறப்படுத்துவேன்.

ஏன்னா, எதுமேலயாவது தண்ணீர் தேங்கி நின்னா, கொசு உற்பத்தியாகும். டெங்கு காய்ச்சலும் வரும்.

வருமுன் காப்பது நல்லது, சுத்தம் சுகாதாரமே ஆரோக்கியம்னு உணராம இருக்கிறது தான் நோய் பரவலுக்கு காரணம்” மூதாட்டி கூறியதைக் கேட்டு ஆச்சரியமானாள் திவ்யா.

“உங்களை மாதிரி தெருவுக்கு ஒருத்தர் இருந்தா போதும்! எந்த நோயும் வராது.

நல்லது செய்ய வயசு ஒரு தடையில்லைனு உணர்த்திட்டீங்க!

நான் இனிமே வீட்டோட சுற்றுப்புற பகுதிகளை சுத்தமா வச்சுக்குவேன்” பாராட்டியபடியே மூதாட்டியை பரிவோடு பார்த்தாள் திவ்யா.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.