16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் என்ற நூலின் மதிப்புரை.
வெளி நாட்டுப் புலவர்கள் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.
ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்
கவிதைகளுக்கு மொழிகள் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால், கவிஞனின் மொழி ஒன்று தான். அதை ஒத்த மனத்துடையார் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
பல காலகட்டத்திலும் வந்த சிறந்த கவிஞர்களின் உணர்வுகளின் தொகுத்த பதிவு. உதாரணத்திற்கு, ரொமான்டிக் இலக்கியத்தின் மூலவரான வில்லியம் வெர்ட்ஸ்வர்த் எழுதிய கவிதைகள் இதில் உள்ளன.
வில்லியம் வேர்ட்ஸ்வரத்தின் கவிதையில், தனித்து ஆற்றாமையோடு பாடும் பெண் எதைப்பாடுகிறாள் எனக்கவிஞன் சுட்டவில்லை. ஆனாலும், நம்மால் உணர முடிகிறது.
அவள் பாடிய வரிகளை, நமது நாட்டிலும் இதே பாடல். இதே பாடலின் வரிகள் உண்டு.
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையோம் எம்குன்றம்
பிறர் கொள்ளார்…
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றம் கொண்டார் யாம் எந்தையும்
இலமே…”
பாரி மகளிரின் இப்பாடலையே வேர்ட்ஸ்வர்த் வெளிநாட்டில் உள்ள அந்தப்பெண்ணின் வாயிலாக கேட்டிருப்பாரோ ? யாருக்குத்தெரியும்? கையறு நிலை காலம் காலமாக தொடர்வது தானே? அது உலகமெங்கும் பொதுவானது தானே?
அதே கவிஞன் கூறும் வரிகள்,
“மொட்டு விட்ட சிறு கொப்புகள்
தங்களை விரித்து அசைத்து
தென்றலை பற்றிக்கொள்ள முயன்றன.”
“மொட்டு விட்ட சிறு கொப்புகள் ” அடடா ! .சற்றே கற்பனை செய்து பாருங்கள். அது வளர் இளம் பருவம். வசந்த காலம். தென்றல், அதனை தூங்க விடாமல் தாலாட்டுகிறது.
தொடமுடியா தென்றலை பற்றிக் கொள்ள பரிதவிக்கிறது கிளை. இதுவும் ஒரு வகை கையறு நிலைதான்.
சாமுவேல் டெய்லர் காலரிட்ஜ் தேய்பிறை நிலவில் தன் பேய் காதலைத்தேடி புலம்பும் பெண்ணை வசீகரமான இடத்தில் வைத்துப்பார்க்கிறார். இது கவிஞனின் சுதந்திரம். பல பெண்களின் இரகசிய உண்மைகள்.
பெர்ஸி பிஷே ஷெல்லி,
“நான் வாடிய இலை என்றால்
என்னை தாங்கிக்கொள் “
என்ற வரிகளில், தான் தலை சாய ஒரு மடி தேடும் நிலை அது தான். தன் வாழ்வில் அனுபவித்த அனுபவங்கட்கு மாற்றாய் ஓர் வாழ்வை தன் கவிதையில் தேடும் நிலை அது.
ஆக்னஸ் பற்றிய ஜான் கீட்ஸின் வரிகள் காதல் உலகப்பொது என்பதற்கு வலிமை கூடுகிறது. ஆண்டாளின் அதே தீவிரத்தோடு, தன் பவித்திரத்தன்மையைக் காக்க எண்ணுகிறாள் ஆக்னஸ். அவளை எண்ணி வழிபட்டவர்கட்கு எண்ணியது நடக்கும் என்று நம்பிக்கை.
நமது திருவரங்கப்பெண்களைப்போலவே, கீட்ஸின் நாயகி மேதலீனுக்கும் இருந்தது. எனவே, ஆக்னஸ் வழிபட்டாள். விரதமிருந்தாள். பரிதவித்தாள்.
ஆங்கில இலக்கியத்தில், ஒரு முக்கிய காலகட்டமாக கருதப்படுவது, முதலாம் எலிசபெத் மகாராணியார் இங்கிலாந்து நாட்டை ஆண்ட காலமே என்று இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த சரித்திர காலமே பொற்காலம் என எடுத்துக்கொள்கின்றனர்.
கலைகள், இலக்கியம் ஆகியவற்றை முதலாம் எலிசபெத் மகாராணியார் ஆதரித்தார். எனவே, இந்த காலகட்டமான 16 -ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியத்தில் துவங்கி, ஒரு கால வெளிப் பயணமாக நல்ல இலக்கிய படைப்புகளை மொழிபெயர்க்கும் சிறு முயற்சியே இந்நூல்.
இறுதியில், ரொமான்டிக் கால கட்டம் ஈறாக, பல்வேறு கால கட்டங்களில் உருவான இலக்கியங்களில், சிறந்தனவற்றை மொழியாக்கம் செய்துள்ளோம்.
நம் தமிழுக்கு நல்ல பிற மொழி இலக்கியத்தை கொண்டு வரும் நல்ல முயற்சியே இந்நூல்.
” ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க் ” புத்தக நிறுவனத்தின் புதிய வெளியீடு
“16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் –தமிழ் மொழிபெயர்ப்பு –(Tamil Translation )– விலை ரூபாய் 150 -00
முகவரி
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்,
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்,
33 தெற்கு ரத வீதி,
ஸ்ரீவில்லிபுத்தூர்– அ.கு. 626125
விருதுநகர் மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா
கைபேசி : 9080551905
S Ramesh
Shakespeare’s Desk
No. 33 South Car Street
Srivilliputtur – PIN : 626 125
Virudhunagar District
Tamil Nadu
India
Mobile : 9080551905