ஆதிமூலக் கடவுள், ஆனைமுகன், கணபதி, விக்னேஸ்வரன் எனப்போற்றப்படும் விநாயகர் பார்வதியின் புதல்வன் என அறியப்படுகிறார். Continue reading “விநாயகர் யார்?”
குருவை அடையும்போது
தொங்கும் பாலங்களாய் உறவுகள்
தள்ளாடி நடக்கும் முதியோர் கைபோல் பாசங்கள்
விளக்கெண்ணெய் போல் வளவளக்கும் பந்தங்கள்
வாழைப்பழத் தோல் போல் நேசங்கள்
எல்லாமே வழுக்கிவிழும் உறவுகள்
எதை நம்பி நடப்பாய் இளைஞா? பாவமடா நீ
எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாத தூரத்தில் உன் சந்தோசம்
முட்டி முட்டி பார்த்தாலும் முயலாத தூரத்தில் உன் மகிழ்ச்சி
பார்த்து பார்த்து நடந்தாலும் நடைபாதையில்லா பயணம்
ஒற்றையடிப் பாதையில் நடப்பது கடினம்தான் தோழா!
முயன்று பார் வெற்றிக்கனி
கிடைத்தாலும் கிடைக்கலாம் உன் சொந்த பந்தத்தை
விட்டு நீ விலகும்போது குருவை அடையும்போது.
– சுருதி
சிவபெருமான் – ஐந்து வடிவங்கள்
சிவபெருமான் ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார்.
1. பிட்சாடனார் – வசீகர மூர்த்தி, மோகன ரூபம்
2. நடராசர் – தன்னை மறந்து ஆனந்த நடமாடும் பரவச நிலை
3. சோமஸ்கந்தர் – கருணாமூர்த்தி, உயிர்களுக்கெல்லாம் அம்மையும் அப்பனுமாய் இருந்து கருணைப் பிராவக நிலை.
4. தெட்சிணாமூர்த்தி – சாந்த மூர்த்தி, சாந்தமாக யோகத்தில் ஆழ்ந்த நிலை.
5. பைரவர் – உக்கிர மூர்த்தி, எதிரிகளை துவம்சம் செய்பவர்.
ஆறுபடை வீட்டின் தன்மைகள்
திருப்பரங்குன்றம் – உல்லாசம்
திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை
பழனி – யோகம்
சுவாமிமலை – இவ்வுலக சுகம்
திருத்தணி – சல்லாபம்
பழமுதிர்ச்சோலை – வினோதம்
இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்
நான்கு வகை தீட்சை
தீட்சை நான்கு வகைப்படும். அவை
திருஷ்டி தீட்சை – பார்வை மூலம் உள்ளத்தில் இருக்கும் அருளை வழங்குதல்
ஸ்பரிச தீட்சை – ஒரு பழத்தை கொடுத்தோ அல்லது ஒரு விரல் மூலம் தொட்டோ அருள் வழங்குதல்
கிருபா தீட்சை – தனது சிந்தையால் சீடனிடம் சக்தி வழங்குதல்
சப்த தீட்சை – ஏதாவது ஒரு மந்திரத்தை சீடனிடம் காதில் ஓதி வழங்குதல்