பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்

விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு

பெற்றோர்

தலைமகன் துபாயில்

இரண்டாம் மகன் இத்தாலியில்

கடைக்குட்டி கத்தாரில்

இவர்களின் பெற்றோரோ

முதியோர் இல்லத்தில்

Continue reading “பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்”

நல்ல காதல் – சிறுகதை

நல்ல காதல்

காதருகே வந்து “இன்று ஆபீஸ்‌ முடிந்து போகும்‌ போது என்‌ வீட்டுக்கு வந்துவிட்டு போ” என அடிக்குரலில்‌ சொன்னாள்‌ சைந்தவி.

சைந்தவி சொந்த ஊர்‌ பீகார். ஐந்து வயதில்‌ ஒரு மகன்‌ இருக்கிறான். இந்த அலுவலகத்தில், அவள்‌ சினிமா நடிகையை போல்‌ பிரபலமானவள்.

அவள்‌ நிறம்‌, அவள்‌ உடுத்தும்‌ நவ நாகரீக மேட்சிங் உடைகள், ‌வித விதமான ஆபரணங்கள் எல்லாம்‌ சேர்ந்து அவளை ஓர் பேரழகியாக நிலைநிறுத்தி விட்டது.

Continue reading “நல்ல காதல் – சிறுகதை”

துணை – சிறுகதை

துணை

மழை பெய்து ஓய்ந்தாற் போல் அமைதியாக இருந்தது வீடு.

சென்ற ஒரு மாத காலமாக மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை இன்று காலை முதல் மாறி விட்டிருந்தது.

அவர்களை வைகை எக்ஸ்பிரஸில் சென்னை அனுப்பிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன் தளர்ச்சியுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தார்.

அவர் வந்ததை அறிந்த விசாலாட்சி ‘பூஸ்ட்’ கலந்து எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

அதை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்த சுப்பிரமணியன் விசாலாட்சியை உற்று நோக்கினார்.

Continue reading “துணை – சிறுகதை”