அழகு – அழகின் சிரிப்பு

அழகு

அழகு என்பது இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கின்றது. பாவேந்தர் பாரதிதாசன் அழகு எப்படி சிரிக்கின்றது, நமது மனதை மகிழ்விக்கின்றது என்பது பற்றி அழகின் சிரிப்பு என்னும் கவிதை நூல் படைத்திருக்கின்றார். அழகு பற்றிப் பாவேந்தர் சொல்வதைப் பார்ப்போம். Continue reading “அழகு – அழகின் சிரிப்பு”

கனவில்

கனவில்

கனவில்

உறங்கும்பொழுது கனவில் மட்டும் வரும் என் இனியவளே!

கண் விழித்தால் காணாமல் போகின்றாய் – எனவே

கண் விழிக்காமல் இருந்தேன் எழுப்பப் பார்த்த Continue reading “கனவில்”

நாராயணா

நாராயணா

நாராயணா

ஏழைகள் படுக்க தரை கூட இல்லையென்ற வருத்தத்தில்

பாம்பு மெத்தையில் படுத்துள்ளாயோ நாராயணா

மனிதன் மனம் வேதனையால் தவிப்பதைச் சகிக்காமல் நீயும் Continue reading “நாராயணா”

நீரோடை

நீரோடை

நீரோடை

மெல்லிய அமைதியான நீரோடை பெண்ணே!

பொங்கி எழும் கடலாக உன்னை மாற்றியது யார்?

“ஓ” சங்கமம் என்ற சந்தோசம்

நீ தனியாக இருந்த வரை, மென்மைக்கு எடுத்துக் காட்டு Continue reading “நீரோடை”

பெண் சிசு

baby girl

பரந்த இவ்வுலகில் பெண் சிசு நான்வாழ இடமில்லை!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.
உணவு கூட கேட்கவில்லையம்மா ஒரே ஒருமுறை
உலகை பார்க்கத்தான் விரும்புகிறேன்;
அதற்கும் மறுக்கிறாயே!

– சுருதி

 

கூலி

குடும்ப சுமையை இறக்க ஏற்றினான்
அவன்முதுகில் சுமையை
நாளை விடியும் என்ற கனவில்!

– சுருதி

 

காலண்டர் (டிசம்பர் 31)

போகிப் பண்டிகை என நினைத்து
அனைத்தையும் துறந்து புதிய ஆடைக்காக
ஏங்கும் அழகிய பெண்!

– சுருதி

 

ஏழை

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறது அரசு
வீடே மரத்தடியில் தானே அதற்கு என்ன சொல்கிறது அரசு?

– சுருதி

 

கண்ணீரலைகள்

மனக் கடல் கொந்தளிக்கும் பொழுது
விழிக்கரையை தாண்டும் நீரலைகள் கண்ணீரலைகள்.

– சுருதி