ஆடுதீண்டாப்பாளை – மருத்துவ பயன்கள்

ஆடுதீண்டாப்பாளை

ஆடு தீண்டாப்பாளை முழுத்தாவரமும் குமட்டலான மணமும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஆடு தீண்டாப்பாளை குடல் புண்களை ஆற்றவும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லவும் விஷத் தன்மையை முறிக்கவும் உடலைப் பலப்படுத்தவும் மாதவிலக்கைத் தூண்டவும் பயன்படுகின்றது.

Continue reading “ஆடுதீண்டாப்பாளை – மருத்துவ பயன்கள்”

நித்தியகல்யாணி – மருத்துவ பயன்கள்

நித்தியகல்யாணி

நித்தியகல்யாணி வேர், உடல் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்; இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; அதிமூத்திரம், களைப்பு, மிகுதாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நித்தியகல்யாணி பூக்களில் இருந்து தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்கான களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.

Continue reading “நித்தியகல்யாணி – மருத்துவ பயன்கள்”

சிறுகண்பீளை – மருத்துவ பயன்கள்

சிறுகண்பீளை

சிறுகண்பீளை முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும், பாண்டு, இரத்தச்சூடு (சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

Continue reading “சிறுகண்பீளை – மருத்துவ பயன்கள்”

குங்கிலியம் – மருத்துவ பயன்கள்

குங்கிலியம்

குங்கிலியம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வெப்பமுண்டாக்கும்; கோழையகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். கீல்வாதம், நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்பு நோய்களைக் குணமாக்கும்.

Continue reading “குங்கிலியம் – மருத்துவ பயன்கள்”

ஓரிதழ்த்தாமரை – மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை

ஓரிதழ்த்தாமரை ஒரு காயகல்ப மூலிகையாகும். முழுத்தாவரம் உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும். சீதபேதியை நிறுத்தவும், மேகநோய்களுக்கான மருத்துவத்திலும் ஓரிதழ்த்தாமரை பரவலாகப் பயன்படுகின்றது. இளைத்த உடலைப் பலப்படுத்துவதற்கான மாத்திரைகள், டானிக்குகளில் ஓரிதழ்த்தாமரை சேர்க்கப்படுகின்றது.

Continue reading “ஓரிதழ்த்தாமரை – மருத்துவ பயன்கள்”