குப்பைமேனி – மருத்துவ ‍பயன்கள்

குப்பைமேனி

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். இதன் இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. Continue reading “குப்பைமேனி – மருத்துவ ‍பயன்கள்”

கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்

கீழா நெல்லி

கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது. Continue reading “கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்”

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

நிலவேம்பு

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். Continue reading “நிலவேம்பு – மருத்துவ பயன்கள்”

நாவல் – மருத்துவ பயன்கள்

நாவல்

நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும். நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும். Continue reading “நாவல் – மருத்துவ பயன்கள்”

தூதுவேளை – மருத்துவ பயன்கள்

தூதுவேளை

தூதுவேளை கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. இருமல், இரைப்பு போன்றவற்றைக் குணமாக்கும். தேரையர் காப்பியத்தில், “தூதுவேளையையுணத் தொக்கினிற் றொக்கிய வேதையா நோயெலா மெய்யைவிட்டகலுமே” என்று தூதுவேளையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. Continue reading “தூதுவேளை – மருத்துவ பயன்கள்”