மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்

மந்திர வளையல்

ஐஸ்வர்யா!

ஒரு மாபெரும் நாட்டு மன்னனின் புதல்வி. நடைபயிலும் குழந்தையாய் இருக்கையில் தாயை இழந்தவள். எனவே, ஐஸ்வர்யாவை நல்ல முறையில் வளர்ப்பதற்காக மன்னர் மறுமணம் செய்து கொண்டார்.

Continue reading “மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

சேற்றில் வழுக்கி விழுந்த இந்து எழுந்திருக்க முயன்று தோற்றுப் போனாள். செருப்பு சேற்றில் மாட்டிக் கொண்டிருந்தன. கால்களை விடுவிக்க முயன்றபோது வலது கணுக்கால் ‘விண்விண்’னென்று வலிக்க ஆரம்பித்தது. மீண்டும் கைகளை ஊன்றி எழ முயன்றபோது, அருகிலிருந்த பூவரசு மரத்தடியில் வந்து நின்றான் ராகவ்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

வீராப்பு – கதை – எம்.மனோஜ் குமார்

நகரில் புதிதாக துவங்கிய ஹோட்டலில், மதியம் சாப்பிடச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள் போலீஸ்காரர்களான வாசுதேவனும் மாரிச்செல்வமும்.

Continue reading “வீராப்பு – கதை – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்?- அத்தியாயம் 6

ஆறி சில்லிட்டுப் போன வெந்நீரை நான்கு விரல்களால் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் இந்து. வேறு வழியில்லை ஊற்றிக் குளித்துதான் ஆகவேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு சட்டென ஒருசொம்பு ஜில்லிட்ட நீரை மொண்டு மேலே ஊற்றிக் கொண்டாள். முதலில் வெடவெடத்தது. மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ள குளிர் விட்டுப்போனது.

“அம்மா! நா கிடுகிடுன்னு ரெடியாகி வந்துடறேன். சாப்பாடு எடுத்து வையி. லேட்டானா எட்டு அம்பது பஸ் போயிடும்” சமயலறையில் இருந்த தாயின் காதுகளில் விழும் அளவுக்குச் சப்தமாய்க் கத்தியபடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்து.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்

20 வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதேச்சையாக பேருந்து நிலையத்தில் சந்தித்தேன்.

முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விவரம் கேட்ட போது மனது கஷ்டமாக இருந்தது.

Continue reading “பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்”