அழகிய மோகினி – சிறுகதை

இரவு 12 மணி.

சன்னாநல்லூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சுந்தரராமன் பஸ் வந்து கொண்டிருந்தது.

அதுதான் அந்த ஊருக்கு கடைசி பஸ் என்பதால் அவ்வளவாக கூட்டம் கிடையாது. விரலை விட்டு எண்ணினால் ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள். பஸ் திருமருகலை தாண்டி வந்து கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப் சீயாத்தமங்கை நெருங்குவதை உணர்ந்த குமரன் தன் ஹேண்ட் பேக்கையும் சூட்கேசையும் எடுத்துக் கொண்டு வண்டி நின்றதும் இறங்கி வேக வேகமாக நடந்தான்.

Continue reading “அழகிய மோகினி – சிறுகதை”

வழித்துணை – சிறுகதை

வழித்துணை சிறுகதை

மாறன் காதலைச் சொல்லி விட்டான்.

கவிதாவுக்கும் அவன்மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. இப்போது காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

இதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான், கவிதாவை ஒருதலையாகக் காதலிக்கும் கார்த்திக்.

Continue reading “வழித்துணை – சிறுகதை”

முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை

முடிவல்ல ஆரம்பம் - சிறுகதை

கவிதா வெகுவாய் தளர்ந்திருந்தாள். சற்றுமுன் வந்த ஃபோன்கால் அவளை அமைதி இழக்கச் செய்தது.

பவித்ரனின் அலுவலக ஃபோன்தான் அது. மீண்டும் அவளது காதில் ஒலித்தது.

“இங்க பாருங்கம்மா, உங்க கணவருடைய நடவடிக்கை ஏதும் சரியில்ல. இதே தனியார் அலுவலகம்னா வேலையைவிட்டு விரட்டியடிச்சிருப்பாங்க. அரசு வேலைன்றதனால பாவபுண்ணியம் பாக்குறோம். இதான் கடைசி. சொல்லி வைங்க.”

“சரி” என்று சொல்லக்கூட திராணியற்று ஃபோனைத் துண்டித்து வைத்தாள்.

Continue reading “முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை”

இப்போதைக்கு நீயும் நானும் – சிறுகதை

கவிதை - சிறுகதை

கேன்டீனில் சுந்தரியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும், அழுது கொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.

செல்வி அழுதுகொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான்.

“செல்வி! செல்வி! நில்லு. ஏன் இவ்ளோ வேகமாப் போற? உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான் அகிலன்.

“ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?”

Continue reading “இப்போதைக்கு நீயும் நானும் – சிறுகதை”

செல்வமகள் – சிறுகதை

“அம்மா… அம்மா …”

“யாரு புள்ள அது?”

“ஏம்மா நான் தான் ரூபி”

“இரு புள்ள, இந்த வரேன்” என்று சொல்லிக் கொண்டு பெரிய வீட்டிலிருந்து ஒரு அம்மா வெளியே வந்தார்.

Continue reading “செல்வமகள் – சிறுகதை”