சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி

மூன்று குண்டுகளில் உள்ள தப்புக் கடலையை எடுத்த மங்கம்மாள் பாட்டி நான்காவது குண்டிற்கு வந்தாள்.

அது வடக்கில் பக்கத்து புன்செய் நிலத்திற்கு அருகில் இருந்தது. இரண்டு புன்செய் நிலங்களும் வரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன.

பொதுவாக கடலை காட்டில் எலிகள் அதிகமாக இருக்கும். அவை வரப்புகளை ஒட்டியே பொந்துகளை (எலி வளை) அமைத்திருக்கும்.

சில எலிப்பொந்துகள் ஐந்து அடி ஆழம் வரையிலும் கூட இருக்கும்.

எலிகள் கடலைக் காட்டில் உள்ள நன்கு விளைந்த திரட்சியான கடலைகளையே சேகரித்து பொந்தில் வைத்திருக்கும்.

Continue reading “சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி”

முத்தான மாப்பிள்ளை – சிறுகதை

முத்தான மாப்பிள்ளை - சிறுகதை

“சங்கரி, இந்த தடவையாவது ரேணுவையும் மாப்பிள்ளையையும் தீபாவளிக்குக் கண்டிப்பாய் வரச்சொல்லு. நானும் மாப்பிள்ளைக்குத் தனியாக போன் பேசிச் சொல்றேன்.”

“நான் சொல்வதைவிட நீங்களும் என்னோட வந்து நேரிலே அவங்களை அழைச்சா நன்னாயிருக்குமேன்னு பார்த்தேன்”‘

“இதோ பார் சங்கரி, அரையாண்டு கணக்கு முடிக்கிற நேரம்; பாங்கில் ரொம்ப டைட் ஒர்க் எனக்கு. அதனாலதான் நீ மட்டும் போயிட்டு வான்னு சொல்றேன்.”

Continue reading “முத்தான மாப்பிள்ளை – சிறுகதை”

அமீர்ஜான் நூல்கள் வெளியீடு

கவிஞர் கா.அமீர்ஜான் அவர்களின் நூல்கள் இன்று (28-05-2022) வெளியிடப்பட உள்ளன.

நுட்பமான உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்த அமீர்ஜான் அவர்கள் கவிதை உலகில் ஒரு நட்சத்திரமாய் என்றும் ஒளிர்வார்.

Continue reading “அமீர்ஜான் நூல்கள் வெளியீடு”