கவலையற்ற கவலை

வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …

Continue reading “கவலையற்ற கவலை”

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!

இந்தியா

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!

பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு

Continue reading “வாழிய பாரதம்! வாழிய பாரதம்!”

திருத்தணிகை நொண்டிச் சிந்து

முருகன்

கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்

மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே

Continue reading “திருத்தணிகை நொண்டிச் சிந்து”

யார் வருவா மீட்டெடுக்க?

கூர்மையான மூக்கு வச்சு…

கூட இரண்டு இறக்கை வச்சு…

கூட்டமாக கூடி நின்று…

கோகோ என்ற சத்தத்துடன்…

நாங்க விட்ட ராக்கெட்டு…

Continue reading “யார் வருவா மீட்டெடுக்க?”