உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

ஒரு வழிப் பாதை

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

பன்னிரெண்டாம் பொதுத்தேர்வை முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மே முதல் வாரத்தில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது வாழ்க்கை முறையின் அமைப்பு கல்வியை வைத்து தீர்மானிக்கப்படுவதால், உங்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற முடிவு, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாக அமையும். அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வும் தீர்மானிக்கப்படும்.

Continue reading “உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!”

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகிறார்கள்.

இந்துக்கள் வருடத்தில் பலமுறை விரதம் மேற்கொள்வார்கள்.

எல்லா மதங்களிலும் நோன்பு இருப்பது கடமை. ஆனால் அதன் வழிகளும் வழிமுறைகளும் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் என்பது அவரவர் இறைவனுக்காக மட்டுமே! என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

Continue reading “நோன்புகளும் விரதங்களும் எதற்காக?”

பாட்டியின் புலம்பல்!

பாட்டியின் புலம்பல்

கூடலூரில் முதுமையால் தளர்ந்த ஒரு மூதாட்டி இருந்தாள். வயதாகியபோதும் நாள் முழுவதும் பரபரப்புடன் ஏதாவது செய்து கொண்டிருப்பாள் அவள்.

களைப்படையும் போது ஒவ்வொரு முறையும் அவள் “எமதர்மராஜா! எப்போதடா என்னை அழைத்துக் கொண்டு போகப் போகிறாய்? எத்தனை காலம் இந்த உலகத்தில் கிடந்து நான் துன்பப்படுவேன்?” என்று சலித்துக் கொள்வாள்.

Continue reading “பாட்டியின் புலம்பல்!”