மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் தமிழகத்தின் அருட்கொடைகளில் ஒருவர். தன் எழுத்தால் தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்.

நாம் இக்கட்டுரையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்ப் புலமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “மகாகவி பாரதியார்”

நன்றாக வாழ விவசாயி சொன்ன வழி

நன்றாக வாழ

நன்றாக வாழ என்ன வழி என்று அறிய, ஒரு வயதான விவசாயி சொல்வதைக் கேட்போம்.

முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் தரமான மக்காசோளங்களை விளைவித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை, அவ்விவசாயின் தரமான மக்காச்சோளமே தட்டிச் செல்லும்.

அந்த விவசாயின் தரமான மக்காச்சோளத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல விலை இருந்தது.

விவசாயின் தரமான மக்காச்சோள விளைவிப்பையும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை அம்மக்காச்சோளம் பெறுவதையும் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டறிந்தார்.

அவர் விவசாயியைச் சந்தித்து அவருடைய வெற்றிக் காரணமான வேளாண்மை ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பினார்.

Continue reading “நன்றாக வாழ விவசாயி சொன்ன வழி”

நான்கு பொம்மைகள் – சிறுகதை

நான்கு பொம்மைகள்

நான்கு பொம்மைகள் கதையிலிருந்து நாம் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குமாரதேசம் என்ற நாட்டை தெய்வசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தார். மன்னருக்கு மணிசேனன் என்ற மகன் இருந்தான்.

அவ்விளவரசனுக்கு பதினாறு வயது நிரம்பி இருந்தபோது காலன் என்கின்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார்.

மன்னரைப் பார்த்து இளவரசன் மணிசேனனுக்கு நான்கு பொம்மைகள் பரிசளிக்க விரும்புவதாக முனிவர் காலன் தெரிவித்தார். Continue reading “நான்கு பொம்மைகள் – சிறுகதை”

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.

ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.

மணிதான் தலைவர்.

தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.

சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.

கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். Continue reading “ரசிகர் மன்றம்”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”