பாம்பே சாம்பார் செய்வது எப்படி?

பாம்பே சாம்பார்

பாம்பே சாம்பார் பருப்பே இல்லாமல் செய்யப்படும் ஒருவகை சாம்பார். இதனுடைய சுவையும் மணமும் மிகவும் அருமையாக இருக்கும்.

இதனை செய்வதும் எளிது. இதனைத் தயார் செய்யத் தேவைப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் குறைவு. காய்கறிகள் இல்லாத சமயங்களிலும் இதனை சட்டென்று செய்து அசத்தலாம்.

ஹோட்டல் சுவையில் சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

Continue reading “பாம்பே சாம்பார் செய்வது எப்படி?”

சத்தி நாயனார் – சிவனடியார்களை பழித்துப் பேசியவர்களின் நாக்கை அரிந்தவர்

சத்தி நாயனார்

சத்தி நாயனார் சிவனடியார்களை பழித்துப் பேசியவர்களின் நாக்கை அரிந்த வேளாளர்.

பண்டைய சோழ நாட்டில் வரிஞ்சையூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. தற்போது வரிஞ்சையூர் இரிஞ்சியூர் என்று வழங்கப்படுகிறது.

Continue reading “சத்தி நாயனார் – சிவனடியார்களை பழித்துப் பேசியவர்களின் நாக்கை அரிந்தவர்”

யாருடன் போட்டி? – கவிதை

வைரக்கல்

விலையுயர்ந்த வைரக்கல் தான்

எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…

இழப்பு வைரத்திற்குத் தானே தவிர

அம்மிக் கல்லுக்கல்லவே

Continue reading “யாருடன் போட்டி? – கவிதை”

மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?

மண்பானை நீர்

வாட்சப்பில் இப்பொழுதெல்லாம் ரொம்ப நல்ல நல்ல விச‌யங்கள் வலம் வருகின்றன‌. சமீபத்தில் அப்படி என்னைக் கவர்ந்த ஒரு பதிவு.

ஒருவன் மண்பானையிடம் கேட்டான் “இந்த கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்று இருக்கின்றாய்?” என்று.

அதற்கு மண்பானை “எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது எனக்குத் தெரியும். எவனொருவன் தனது ஆரம்பத்தையும் முடிவினையும் உணர்ந்திருக்கின்றானோ! அவன் ஏன் சூடாகப் போகிறான்? எப்போதும் குளிர்ந்தே இருப்பான்” என்றது.

Continue reading “மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?”