ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது

ஆப்கானிஸ்தான்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது

கெட்டது – 56% (10 வாக்குகள்)

நல்லது – 44% (8 வாக்குகள்)

அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை

அன்பிற்கு பஞ்சம்

என்னுடைய மாமனாரின் முதல் நினைவு நாளுக்காக, மனைவி, குழந்தைகள் என குடும்பம் சகிதமாக விருதுநகரில் இருந்த மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

என்னுடைய சொந்த ஊரும் விருதுநகர் தான். நான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பினை முடித்ததும் இந்த ஊரில்தான்.

கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றவன், அங்கேயே வேலையும் கிடைக்க, அப்பாவின் டிரேடிங்கையும் சென்னைக்கு மாற்றச் சொல்லி அம்மா, அப்பா மற்றும் பாட்டியுடன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன்.

Continue reading “அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை”

கூவம் ஆறு – ஓர் பார்வை

கூவம் ‍ஆறு - ஓர் பார்வை

கூவம் ஆறு பற்றி தெரியாதவர்கள் சென்னை நகரில் இருக்க மாட்டார்கள். சென்னைக்கு வெளியே இருப்பவர்களும் கூவம் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.

கூவம் என்றால் என்ன?

அது பெரிய சாக்கடை என்றே பலர் நினைக்கிறோம்.

அது ஒரு புனித நதி என்றால் நம்புவீர்களா?

அதுதான் உண்மை. கூவம் ஆறு பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சென்னை நகரில் இருப்போர் கூவம் ஆறு பற்றி அறிவார்கள். ஆனால் கொசஸ்தலை ஆற்றை அறிந்திருக்க மாட்டார்கள்.

நாம் கூவம் ஆறு என்ற தலைப்பில் இரண்டு நதியையும் பற்றி பார்ப்போம்.

காரணம் இன்றைய நிலையில் கொசஸ்தலை ஆறு சென்னைக்கு நீர் கொடுக்கின்றது. கூவம் சென்னைக்கு நீர் கொடுக்கவும் செய்கின்றது; சென்னை மாநகரத்திலிருந்து கழிவுகளைக் கொண்டும் போகின்றது.

Continue reading “கூவம் ஆறு – ஓர் பார்வை”

அடுத்த கதை – சிறுகதை

அடுத்த கதை – சிறுகதை

முகிலனுக்கு வெகு நாட்களாகவே உள்ளூர‌ ஓர் குறை. எல்லோரும் அவன் எழுதும் கதைகளை ரசித்துப் படித்து பாராட்டும் போது ஸ்வர்ணா மட்டும் ஏன் எவ்வித அபிப்ராயமும் கூறுவதில்லை?

ஸ்வர்ணா வேறு யாருமல்ல; அவனுடைய மனைவிதான்.

அலுவலக நண்பர்கள் அனைவருமே அவனது கதைகளைப் படித்து விட்டு, அவரவர் அபிப்ராயங்களைக் கூறி வந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் அவனே ஒவ்வொருவரிடமும் கதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளை எடுத்துச் சென்று காண்பித்தது போய், இப்போதெல்லாம் அவர்களே வலிய இவனிடம் வந்து கங்கிராட்ஸ், சூப்பர்ப், வொண்டர்ஃபுல், மார்வலஸ் என அவனது கதைகளை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

Continue reading “அடுத்த கதை – சிறுகதை”