திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்

திருஞானசம்பந்தர் நாயனார்

திருஞானசம்பந்தர் நாயனார் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர். உமையம்மை இவருக்கு சிவஞானம் கலந்த ஞானப்பாலை ஊட்டியதால் மூன்று வயதிலேயே இறைவனைப் போற்றிப் பதிகம் பாடும் திறனைப் பெற்றவர்.

பதிகம் என்பது இறைவனைப் போற்றும் முதல் பத்து பாடல்களையும், அப்பாடல்களால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் இறுதிப் பாட்டையும் கொண்ட தொகுப்பு ஆகும்.

திருஞானசம்பந்தர் நாயனார் சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ சமயக் குரவர்களில் ஏனையோர் ஆவர்.

Continue reading “திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்”

ஆசிரியர் தின வணக்கம்!

ஆசிரியர்

செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினம்.

ஏணியாய் இருந்து மாணவர்களை உயர்த்தும் அறப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் இனிது வணங்குகின்றது!

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

பொதுக் கரைப்பான்- நீருடன் ஓர் உரையாடல்- 20

சில எலுமிச்சை பழங்கள் இருந்தன. அவற்றுள் இரண்டு மிகவும் பழுத்திருந்தன. ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் புள்ளிகளும் இருந்தன. அப்படியே வைத்திருந்தால், அவை அழுகிவிடும்.

“என்ன செய்யலாம், எலுமிச்சை சாதம் செய்யலாமா?” என்று யோசித்தேன். ஆனால், காலையில் சமைத்திருந்த சாம்பார் அதிகமாகவே இருக்கிறது. ‘சாம்பார் வீணாயிடுமே?’ என்றும் தோன்றியது.

‘சரி சாறு போட்டிடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20”

டிபன் பாக்ஸ் குறும்படம் விமர்சனம்

டிபன் பாக்ஸ்

டிபன் பாக்ஸ் குறும்படம் வறுமையின் வலியை, இயலாமையின் ரணத்தை உணர வைக்கிறது.

இளமையில் கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் எட்டாத் தூரத்தில் இருக்கும்போது, மனம் அடையும் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது உடல் ரணத்தை விட அதிகமாக வலி தரக்கூடியது. அதன் ஆழமான வடுக்கள் எல்லாவற்றிலும் விரக்தியை உண்டு செய்யும்.

சமூகம் மேடு பள்ளங்களையுடையது. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் இன்னொன்றைப் போலில்லை. எங்கும் எதுவும் ஒன்றாகவே இருந்து விடாது.

Continue reading “டிபன் பாக்ஸ் குறும்படம் விமர்சனம்”

குறுக்கெழுத்துப் புதிர் – 1

குறுக்கெழுத்து கண்டுபிடிங்கள் - 1

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

இடமிருந்து வலம்

1 . கொடிய வகை நோய் தொற்று

3. மதில் மேல் இது

Continue reading “குறுக்கெழுத்துப் புதிர் – 1”