அப்பா – சிறுகதை

அப்பா

“சரவணா, மகாளய அமாவாசையான நாளைக்கு, அப்பாவுக்கு பித்ரு வழிபாடு செய்யலாமான்னு, ஒரு எட்டு போய் ஐயர பாத்து கேட்டுட்டு வந்திருரேன்” என்றாள் அத்தை மங்கம்மா.

“ம்..ம்… பாப்போம்” என்றபடி அம்மாவையும், அக்காவையும் பார்த்தான் சரவணன் விரக்தியாக.

அம்மாவும் அக்காவும் ஏதும் பேசாமல் சரவணனையே பார்த்துக் கொண்டிருந்தனர். Continue reading “அப்பா – சிறுகதை”

வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

சுவையான வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப் மிகவும் ஆரோக்கியமான, ருசியான சூப் ஆகும். வாழைத்தண்டினை சுத்தம் செய்வதற்கு யோசிப்பவர்கள் கூட இதனை எளிதாக செய்யலாம்.

கடைகளில் வாழைத்தண்டு வாங்கும் போது புதிதாக இருப்பதைப் பார்த்து வாங்கவும். வெளியே இருக்கும் கையால் எளிதாக பிரிக்கக் கூடிய தோல்களை பிரித்துவிட்டு உள்ளே இருக்கும் தண்டினை மட்டும் பயன்படுத்தவும். Continue reading “வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?”

கூர்ந்து பார்க்கிறானா? கூர்மை பார்க்கிறானா?

கத்தி

ஒரு சமூகத்தில்

ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டவன்

தன் கையில் இருக்கும் கத்தியைக்

கூர்ந்து பார்க்கிறானா இல்லை

கூர்மை பார்க்கிறானா என்பதை

அந்த சமூகமே தீர்மானிக்கிறது…

வெ.வசந்த்

 

காதார் குழையாடப் பைம்பூண் பாடல் விளக்கம்

காதார் குழையாடப் பைம்பூண் கனலாடக்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாட என்ற இப்பாடல், திருவெம்பாவையின் பதினான்காவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடலை திருவாதவூராராகிய மாணிக்கவாசகர், கொன்றைப் பூவினை அணிந்துள்ள இறைவரான சிவபெருமான் மீது பாடினார். Continue reading “காதார் குழையாடப் பைம்பூண் பாடல் விளக்கம்”